அரசு கலை அறிவியல் கல்லூரியில் இளநிலை கணித பாடத்தை மாணவர்கள் விரும்பவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 47 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே கணித பிரிவில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்; 4 அரசுக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பூஜ்ஜியம். மாணவர் சேர்க்கை இல்லை என ஏற்கனவே 6 கல்லூரிகளில் கணித பாடப்பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.