இளம் நட்சத்திரங்களுக்கான ஜூனியர் அதிவேக செஸ் தொடரில் இந்திய வீரர் குகேஷ் (17) சாம்பியன் பட்டம் வென்றார். டெல்லியில் நடந்த இறுதிப் போட்டியில் உலகத் தரவரிசையில் 13வது இடத்திலுள்ள குகேஷ், ரவுனக் சாத்வானியை எதிர்கொண்டார். மொத்தம் நடந்த 28 சுற்றில் 27ல் வென்ற குகேஷ் 17.5-10.5 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார். இவருக்கு ச.18 லட்சம் பரிசுத் தொகை கிடைத்தது.