மட்டன் சாப்பிட்டால் மாரடைப்பு வருமா? ஆட்டுக்கறியுடன் இதை மட்டும் சேருங்க..ஹார்ட் அட்டாக் அண்டாது

மட்டன் சாப்பிடலாமா? சாப்பிடக்கூடாதா? 

ஆட்டுக்கறி சாப்பிடுவதால் ஹார்ட் அட்டாக் வருமா? அப்படியானால் இதற்கு தீர்வு எதுவுமே கிடையாதா? என்ற கேள்விகள் அசைவப்பிரியர்களின் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது.

சிவப்பு இறைச்சி செரிக்கப்படும்போது, ஒரு மெட்டாபொலிட் வெளியாகிறது என்று சமீபத்திய ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது... சிவப்பு இறைச்சியை அதிக அளவில் உட்கொள்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு இதுவே காரணம் என்கிறார்கள்.

இது எல்டிஎல் அல்லது கெட்ட கொழுப்பை அதிகரிப்பதுடன், ரத்த உறைவு மற்றும் பிளேக் உருவாவதை தூண்டுகிறதாம். அத்துடன், சிவப்பு இறைச்சியில் கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் சோடியம் அதிகம் உள்ளது என்பதால், மாரடைப்பு வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்கிறார்கள் டாக்டர்கள். ஆனாலும், குறைந்த அளவு மட்டன் சாப்பிடுவதால், ஓரளவு இதை தடுக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கு மட்டன் குறித்து விரிவாக காண்போம்.


ஆட்டிறைச்சி:

 சிலர் மட்டன், சிக்கன் சாப்பிட்டுவிட்டு, நிறைய சுடுதண்ணீரை குடிப்பார்கள். இப்படி வெந்நீர் குடித்தால், அசைவ பொருட்களில் உள்ள கொலஸ்ட்ரால் கரைந்துவிடும் என்று நினைக்கிறார்கள். அது தவறு.

அசைவ உணவை சாப்பிட்டுவிட்டு, சுடுதண்ணீர் குடித்தால், கொழுப்பு கரையும் என்று நினைத்து கொள்ளவே கூடாது.. சுடுதண்ணீர் எவ்வளவு குடித்தாலும், கொழுப்பு,+ கொலஸ்ட்ராலை துளியும் குறைக்காது.. வேண்டுமானால் உங்கள் வயிற்றை சுத்தப்படுத்தி கொள்ள சுடுதண்ணீர் உபயோகப்படுமே தவிர, கொழுப்பை கரைக்க உதவாது.

நாம் 2 வகையான மட்டனை சாப்பிடுகிறோம்...செம்மறி ஆட்டுக்கறி + வெள்ளாட்டுக்கறி என்று இரண்டு வகையான மட்டன்களை சமைத்து உண்கிறோம்... செம்மறி ஆட்டில், வெறும் 100 கிராமை எடுத்துக் கொண்டால், அதில், 300 காலரிகள் இருக்கிறது.. கொழுப்பு மட்டுமே 20 கிராம் உள்ளது.. புரோட்டீன் 25 கிராமும், கொலஸ்டிரால் 100 மி.கிராமும் உள்ளது.

வெள்ளாடு : 

ஆனால், வெள்ளாட்டில் அப்படியில்லை.. 100 கிராமில் 130 காலரிதான் இருக்கிறது.. கொழுப்பு 3 கிராம்தான் உள்ளது.. புரோட்டீன் 27 கிராம் உள்ளது.. அதனால், இவைகளில் வெள்ளாடுதான் சிறந்தது.. இந்த மட்டன்களிலுமே இரும்பு, துத்தநாகம், வைட்டமின் பி-12 என சத்துக்கள் சமமாக இருந்தாலும்கூட, காலரிகளில் வித்தியாசப்படுகிறது. அதனால், வெள்ளாட்டை பயன்படுத்துவது நல்லது.


அதை எப்படி உண்பது :

 செம்மறி ஆட்டில் கொழுப்பு அதிகம் உள்ளதால், மாரடைப்பு இதில் வர வாய்ப்புள்ளது.. வெள்ளாட்டுக்கறி சாப்பிட்டாலும்கூட, மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு உள்ளது.. அதனால், அந்த மட்டனை ஆரோக்கியமானதாக மாற்றுவது உங்கள் கைகளில்தான் இருக்கிறது.. நாம் அதை எப்படி சமைக்கிறோம் என்பதில்தான் சூட்சுமம் அடங்கி உள்ளது.

குறைவான எண்ணெய் :

 எண்ணெய் குறைவாக, சேர்த்து சமைத்தால், மட்டன் ஹார்ட் அட்டாக் வராது என்று நினைத்து கொள்கிறார்கள்.. அது தவறு.. நிறைய எண்ணெய் நிறைய சேர்த்து மட்டனை சமைக்க கூடாது. டீப் ஃப்ரை செய்தும் சாப்பிடக்கூடாது.குறைவான எண்ணெய்யில் வேக வைத்தோ அல்லது கிரில் செய்தோ அல்லது கிரேவியாகவோ அல்லது சூப்பாகவே செய்து சாப்பிட்டால், சத்துக்கள் வீணாகாமல் கிடைக்கும். ஆனால், மட்டன் சாப்பிடும்போது கண்டிப்பாக, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டும்.

ஆண்களுக்கு 40 கிராமும், பெண்களுக்கு 30 கிராம் நார்ச்சத்தும் எடுத்தே ஆக வேண்டுமாம். அதனால், கேரட், பீன்ஸ், வாழைக்காய், முருங்கைக்காய், காலி பிளவர், தோல் இருக்கும் உருளைக்கிழங்கு போன்றவைகளுடன் சேர்த்து மட்டன் சமைக்கும்போது, மட்டனில் உள்ள கொழுப்புக்கள் உறிஞ்சப்பட்டுவிடும்.. பிறகு, வெங்காயம் + தக்காளி போன்றவைகளை சாலட் போலவும் சேர்த்து சாப்பிட வேண்டும்.. காரணம், இந்த நார்ச்சத்துக்கள் மட்டனுடன் இணைந்து வேகமாக கொழுப்பை எரித்துவிடும்.

காலரிகள்: 

இதையெல்லாம் கடைப்பிடித்து செய்வதானால், வாரத்துக்கு 1 முறை அல்லது 2 முறை மட்டுமே, சரியான காலரியுடன் மட்டனை சாப்பிட வேண்டும் என்கிறார்கள்.. ஆக மட்டனை சாப்பிடலாம்.. ஆனால், அதை எப்படி சாப்பிடுவது, எத்தனை முறை சாப்பிடுவது, எவ்வளவு நார்ச்சத்துடன் சேர்த்து சாப்பிடுவது என்பது உங்கள் கையில்தான் உள்ளது என்கிறார்கள் டாக்டர்கள்.




Previous Post Next Post

نموذج الاتصال