குருமா, மசாலா, கிரேவி, பிரின்ஜி உள்ளிட்ட, பல வகை உணவுப்பொருட்கள் சமைக்க, பச்சை பட்டாணி பயன்படுத்தப்படும்.
இதில் என்ன தீங்குகள் என கேட்போருக்கு ,இதை சந்தைகளிலும், அவசர தேவைக்கு வீட்டு அருகில் உள்ள சிறு கடைகளிலும் வாங்கி, பயன்படுத்தி , பயன் படுத்தி வருகின்றனர். இந்த பட்டாணியில், பச்சை நிறத்திற்காக சேர்க்கப்படும் ரசாயன பவுடரால், உடலுக்கு பல்வேறு தீங்குகள் ஏற்படும் நிலை உள்ளது. பச்சை பசேல் என, இருப்பதற்காக, உலர்ந்த பட்டாணியை, பச்சை நிற ரசாயன பவுடர் கலந்த நீரில் ஊறவைத்து, அதை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்கின்றனர்.
கலப்படம் செய்யப்பட்டதை எப்படி கண்டறிவது ?
சில கடைகளில், பாக்கெட்டுகளில் அடைத்த பட்டாணி விற்கப்படுகிறது.
இதை வாங்கிச் சென்று, சமைப்பதற்கு முன், அதை சுத்தம் செய்ய தண்ணீர் ஊற்றினால் அதிலிருந்து, பச்சை நிற சாயம் வெளியேறுகிறது. பொதுமக்களும், பச்சை பட்டாணி என்றாலே, பச்சை நிற சாயம் போகும் என. நினைத்து கொள்கின்ற இதை தொடர்ந்து பயன்படுத்துவதால், உடலுக்கு பல்வேறு தீங்கு ஏற்படும் நிலை உள்ளது.
ஏற்படும் தீங்குகள் :
செயற்கை நிறமூட்டிய உணவு வகைகளை சாப்பிடுவதால், வயிற்று உபாதைகள் ஏற்படும் மேலும், கல்லீரல் பாதிக்கப்படுவதோடு, புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதனை குழந்தைகளுக்காக பயன்படுத்தும் முன் கவனமாக இருக்க வேண்டும்.
நல்ல பட்டாணி எது !
பொதுவாக நல்ல பட்டாணி இயற்கை இளம் பச்சை நிறத்தில் காணப்படும். மேலும் நீரில் எந்த ஒரு சார் நிறத்தையும் வெளியேறாது.
கலப்படம் பற்றி புகார் அளிக்க :
இது போன்ற கலப்படம் மற்றும் சுகாதாரமற்ற உணவுகள் தயாரிப்போர், விற்பனை செய்வோர் குறித்து, தகுந்த ஆதாரங்களுடன், தமிழக உணவு பாதுகாப்பு துறையின், 94440 42322 என்ற, 'வாட்ஸ் ஆப்' எண்ணில் அளிக்கலாம். 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.