தமிழகத்தில் இளங்கலை எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று காலை 10 மணி முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விவரக்குறிப்பு, விண்ணப்பங்கள் www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் கிடைக்கும். விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 7-ம் தேதி என மருத்துவ இயக்குனரகத்தின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.