ஆசிரியர் என்னும் தெய்வம் இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்..!



ஆசிரியர் என்னும் தெய்வம்...

நம்மை படைத்தவர் தெய்வம் என்றால் நம்மை நல்வழிப்படுத்தி மனிதராக மாற்றும் ஆசிரியரும் தெய்வம் தான்..

உழைப்பு...

தன் வீட்டில் இருக்கும் நேரத்தை மாணவர்களுடன் தான் பல மணி நேரம் இருக்கிறார்கள் மாணவர்களாக பல மணி நேரம் உழைக்கிறார்கள்...

அறப்பணி...

ஆசிரியர் பணியை அறப்பணி அதில் தன்னை அர்ப்பணி என்ற சிரிய நோக்கத்துடன் தன்னலம் கருதாது உழைக்கும் ஜீவன்கள் ஆசிரியர் பெருமக்கள் இவர்களை தினமும் போற்ற வேண்டும்...

வருத்தம் அளிக்கும் நிகழ்வு..

இவ்வாறு ஒரு புனிதமான  பணியை செய்து வரும் ஆசிரியர்களை சில மாணவன் நண்பர்கள் அவமதிப்பது மரியாதை இல்லாமல் நடந்து கொள்வது அந்த வீடியோக்கள் எல்லாம் பார்க்கும் பொழுது மிகப்பெரிய வேதனை அளிக்கின்றது இதனை நினைத்து நான் வருத்தம்  அடைகின்றேன்.

செதுக்குதல் ...

கல்லை சிலையாக செதுக்குபவன் சிற்பி ஆனால் மனிதரை மனிதனாக செதுக்குவது அது ஆசிரியர்கள் மட்டும்தான்.

தாய் -தந்தை-ஆசிரியர்...

ஒரு குழந்தையை பெற்றெடுத்து பத்திரமாக பார்த்து பார்த்து எடுப்பது தாயின் கடமை அந்த குழந்தையை சித்திரமாய் செதுக்கி எடுப்பது ஆசிரியரின் கடமை..
ஒரு குழந்தையை குறை இல்லாமல் வளர்ப்பது தந்தையின் கடமை அந்த குழந்தை குற்றமில்லாமல் வளர்வது ஆசிரியர் செய்த சாதனை. இதுதான் தாய் தந்தைக்கும் ஆசிரியருக்கும்  உள்ள வேறுபாடு.

பொறாமைபடாத ஜீவன்...

தன்னைவிட ஒரு மிகப்பெரிய உயர்ந்த நிலைக்கு ஒரு பிரதமராகவும் குடியரசுத் தலைவராகவும் வந்து ஆசிரியர் முன்னால் சென்று நின்றால் பொறாமை படாத ஒரே ஜீவன் ஆசிரியர் பெருமக்கள் மட்டும்தான் இதே சொந்தக்காரர்கள் முன்னால் நின்றால் பொறாமை படுவார்கள் இதுதான் உறவுக்கும் உன்னதமிக்க ஆசிரியருக்கும் வேறுபாடு.

ஏணிகள்...

எட்டாத உயரத்தையும் எட்ட வேண்டும்  என்ற இலக்குடன் ஏணிகளாய் நம்மை அழைத்துச் செல்லும் ஏணி தான் ஆசிரியர்கள்...
சாதாரண மனிதனாக பிறக்கும் நம்மை சாதனை மனிதனாக சரித்திர மனிதனாக மாற்றுவது போற்றுதலுக்குரிய ஆசிரியர்கள் தான்.
Previous Post Next Post

نموذج الاتصال