Notification texts go here Contact Us Buy Now!

சர்க்கரை நோய் கட்டுக்குள் வர இதோ இரண்டு தீர்வுகள் !

சர்க்கரை நோய் உருவாக முக்கிய காரணம் உணவுமுறை பழக்கம் தான்.
ஆரோக்கியமற்ற உணவுகளை உண்ணுதல், வாயில் நன்கு அரைக்காமல் உணவை விழுங்குதல் போன்றவற்றால் இரத்தத்தில் கெட்ட குளுக்கோஸ் அளவு அதிகரித்து சர்க்கரை அளவு அதிகரிக்கும்.

இந்த சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் நாட்டு வைத்திய குறிப்பு கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

தீர்வு 01

• கொய்யா காய்
• சின்ன வெங்காயம்

ஒரு கொய்யா காயை சுத்தம் செய்து காய் சீவல் கொண்டு சீவிக் கொள்ளவும். பிறகு 5 அல்லது 6 சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சீவி வைத்துள்ள கொய்யாவில் போட்டு கலந்து சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். சர்க்கரை அளவு கட்டுக்குள் வைக்கும் திறன் கொய்யாவிற்கு இருக்கின்றது.

தீர்வு 02

• வெந்தயம்
• கருப்பு கொண்டைக்கடலை
• நெல்லிக்காய் வற்றல்
• நாவல் கொட்டை
• மருதம்பட்டை
• கருஞ்சீரகம்

ஒரு கிண்ணத்தில் வெந்தயம் சேர்த்து தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊறவிடவும். அதேபோல் மற்றொரு கிண்ணத்தில் கருப்பு கொண்டைக்கடலை சேர்த்து தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும்.
பிறகு இரண்டு காட்டன் துணி எடுத்து அதில் வெந்தயம் மற்றும் கருப்பு கொண்டைக்கடலை சேர்த்து மூட்டையாக கட்டி முளைக்கட்டவும்.

முளைக்கட்டிய வெந்தயம் மற்றும் கருப்பு கொண்டை கடலையை ஈரமில்லாமல் காயவைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் இதை சேர்த்து அதனுடன் 50 கிராம் நெல்லிக்காய் வற்றல், 100 கிராம் நாவல் கொட்டை, 50 கிராம் மருதம்பட்டை மற்றும் 50 கிராம் கருஞ்சீரகம் சேர்த்து நன்கு பொடித்துக் கொள்ளவும்.

பிறகு இதை ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும். அடுத்து அதில் மாம்பருப்பு பொடி 100 கிராம் மற்றும் 50 கிராம் வேப்பிலை சூரணம் சேர்த்து நன்கு கிளறி ஒரு பாட்டிலில் சேமித்து கொள்ளவும்.

இந்த பொடியில் இருந்து 1/2 ஸ்பூன் அளவு எடுத்து 1 கிளாஸ் நீரில் கலந்து குடித்தால் சர்க்கரை அளவு நிமிடத்தில் கட்டுக்குள் வரும்.


إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.
NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...