தமிழக மக்களே பொங்கல் பரிசுத்தொகுப்பு வாங்க ரெடியா..? இதோ வந்துவிட்டது குட் நியூஸ்.!!!

ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு கரும்பு, பச்சரிசி உள்ளிட்ட பரிசுத்தொகுப்பு, ஆயிரம் ரொக்க பணமும் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த வருடம் அரசு தற்போது வரையிலும் இதுகுறித்து கூறவில்லை. அதாவது தற்போதைக்கு தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடை மூலமாக 6000 நிவாரணம் வழங்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் பொங்கல் பரிசு தொகை குறித்து அறிவிப்பை அரசு வெளியிடவில்லை.

இந்த நிலையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 1000 ரொக்க பணத்தோடு அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பரிசுத்தொகுப்பு இந்த மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து வழங்கப்படலாம் எனவும் ஓரிரு நாட்களில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Previous Post Next Post

نموذج الاتصال