தர்பூசணி பழம் வாங்கும் போது செய்ய கூடாதவைகள் !

  • தர்பூசணி பழம் நன்மைகள்
  • எப்படி தேர்ந்தெடுப்பது 

கோடை காலத்தில் ஏற்படும் வெப்பத்தால் உடலில் உள்ள நீர் சத்துக்கள் குறைகின்றன.

மேலும்,நீர் சத்துக்கள் குறைவு காரணமாக பல நோய்கள் கோடை காலங்களில் ஏற்படுகின்றன.இதை தவிர்க்க கோடை காலங்களில் அதிக நீர் சத்துக்கள் கொண்ட உணவு வகைகளை எடுத்து கொள்ளவது அவசியமாகும்.அதிலும் பழங்களில் அதிக அளவில் நீர் சத்துக்கள் உள்ளன.

இதையும் படிக்க : சளியை விரட்டும் துளசி& கற்பூரவல்லி சர்பத்..! எப்படி தயாரிப்பது..! தெரியுமா..?

இதில் குறிப்பாக கோடை காலங்களில் நீர் சத்து நிறைந்த தர்பூசணி பழம் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவ்வாறான தர்பூசணி பழங்களில் நல்ல பழத்தை எப்படி தேர்ந்தெடுப்பது மற்றும் தர்பூசணி வாங்குவது எப்படி ? பற்றி இக்கட்டுரையில் விரிவாக பார்ப்போம்.

தர்பூசணி பழம் நன்மைகள்:

 தர்பூசணி பயன்கள் ,பொதுவாக ஓர் தர்பூசணி பழமானது 80 சதவீதம் நீர் சத்துக்கள் நிறைந்துள்ளன.இந்த சத்துக்கள் கோடை காலத்தில் உடலில் ஏற்படும் அதீத வெப்பத்தை தணிக்கும் தன்மையை கொண்டு உள்ளன.


எப்படி தேர்ந்தெடுப்பது :

 தர்பூசணி பழங்களில் பல வகைகள் இருந்தாலும் கோடை காலங்களில் ஒரு சில குறிப்பிட்ட வகை பழங்கள் அதிக அளவில் அறுவடை செய்ய படுகின்றன. 

இதில் ஆண் , பெண் என இரண்டு வகையான பழங்கள் உள்ளன இவை பொதுவான தர்பூசணி வகைகள். ஆண் பழங்கள் பார்பதற்கு நீள் வட்ட வடிவில் இருக்கும் மேலும் இதில் அதிக அளவில் நீர் சத்துக்கள் நிறைந்திருக்கும். பெண் தர்பூசணி பழம் பார்பதற்கு சீரான கோளம் வடிவத்தில் அதிக சுவை நிறைந்ததாக இருக்கும்.இந்த வகை பழங்களில் சுவை அதிகமாக இருந்தாலும் நீர் சத்துக்கள் குறைவாக இருக்கும்.

  தர்பூசணி பழம் வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்களை பார்க்கலாம்.

  1.  சீரான வடிவில் எடைக்கு ஏற்ப வடிவம் கொண்ட பழத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  2. வெட்டு பட்ட அல்லது கீறல்கள் கொண்ட பழங்களை தவிர்க்கவும்.
  3.  தர்பூசணி காம்புகள் காய்ந்து இருந்தால் அது நன்கு பழுத்து என அறியலாம்.
  4.  தர்பூசணியை கையால் தட்டி பார்க்கும்போது உள்ளே காலியாக இருக்கும் சத்தம் கேட்டால் நான்கு கனிந்த பழம்.

 மேற்கண்ட குறிப்புகள் பின்பற்றி தர்பூசணி பழம் வாங்கும் போது நல்ல தர்பூசணி பழங்களை வாங்கலாம்.


இதையும் படிக்க: வாழ்வில் நிம்மதி எப்போது..?


Previous Post Next Post

نموذج الاتصال