பழங்களின் ராஜா எனப்படும் மாம்பழம் பழம் முக்கனிகளில் முதற்கனியாகும். நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பேயே நமது நாட்டில் காட்டு மரமாக மாமரங்கள் வளர்ந்துள்ளன. மாம்பழத்தின் தாயகம் இந்தியா, மலேசியப் பகுதிகளாகும்.
1665-இல் மொலுக்கஸ் தீவுகளுக் கும், பிலிப்பைன்ஸ் நாட்டுக்கும், 1690- இல் இங்கிலாந்து நாட்டுக்கும், 1742– இல் ஜமைக்கா நாட்டுக்கும், 1776-இல் மெக்சிகோ, 1800-இல் ஆஸ்திரேலியா, ஹவாய், 1880-இல் எகிப்து, பாலஸ்தீன நாடுகளுக்கும், 18-ஆம் நூற்றாண்டில் யேமன் நாட்டுக்கும் மாம்பழங்கள் பர வின.
உலகின் மொத்த மாம்பழ உற்பத்தியில் இந்தியாவில் 63 சதவீத அளவு விளைகி றது என்றாலும், மாம்பழ ஏற்றுமதியில் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது.
மாம்பழங்களின் வகைகள்
தேசஹாரி,பங்கனப்பள்ளி, தோடாபூரி, நீலம், பாஸ்லி அல்போன்ஸா, பைரி, களப் பாடு, பஞ்சவர்ணம், பங்களூரா, ஹூமா யுதீன், ருமானி, சப்பட்டை.
சில வெளிநாட்டு ரகங்கள்: சிந்த்ரி, ஜூலி (பாகிஸ்தான்), கேரபோவ், பிகோ (பிலிப்பைன்ஸ்), இர் வின், ஹாடன், லிப் பன்ஸ (கனடா), எஸ் மெரால்டா, டாமி, அட்கின்ஸ், ஜில், போரிபோ, நெகோவ், மாம்ப (மெக்ஸிகோ), போரிபோ, நெகோவ், மாம்ப் ருகோ, மிலிண்டா (ஆப்பி ரிக்கா).
சில வெளிநாட்டு ரகங்கள்: சிந்த்ரி, ஜூலி (பாகிஸ்தான்), கேரபோவ், பிகோ (பிலிப்பைன்ஸ்), இர் வின், ஹாடன், லிப் பன்ஸ (கனடா), எஸ் மெரால்டா, டாமி, அட்கின்ஸ், ஜில், போரிபோ, நெகோவ், மாம்ப (மெக்ஸிகோ), போரிபோ, நெகோவ், மாம்ப் ருகோ, மிலிண்டா (ஆப்பி ரிக்கா).
பல்வேறு மொழி பெயர்கள்
ஆங்கிலம் - மேங்கோ, இந்தி- ஆம், தெலுங்கு- மா, கன்னடம்- மாவினா ஹன்னு, மராட்டியம்– ஆம்பா, சிந்தி- ஆம்ப், அரபு-அம்பஜ், ஜெர்மன்–மாங் கோபாம், பிரெஞ்ச்- மாங்குயிர், மலை யாளம் மாவு.
மாம்பழத்தை எப்படி பயன்படுத்தலாம்
கனிகளை நேரடியாக உண்ணலாம். பல்வேறு வழிகளில் பக்குவம் செய்து பயன்படுத்தலாம். கனியை நறுக்கி டப்பாக்களில் அடைத்துவைக்கலாம். மாம்பழச்சாறு, பொடிகளையும் தயாரிக்கலாம். இந்தப் பொடியில் இருந்து ஐஸ்கிரீம், குழந்தைகளுக்கான உணவுகளைத் தயாரிக்கலாம். கோதுமை மாவுடன் கனிச்சதையைக் கலந்து சேமியா மாவைத் தயாரிக்கலாம். மாம்பழ ஸ்குவாஷ், மாம்பழ சிரப், ஜூஸ், பாகுக ளைச் செய்யலாம்.
மருத்துவப் பயன்கள்
மாம்பழத்தைத் தொடர்ந்து உண்டு வந் தால், தோல் பளபளப் பாகும். தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும். தீராத தலைவலியை மாம்பழச் சாறு தீர்க்கும். கோடை மயக்கத்தைத் தீர்க் கும். மாம்பழத்தில் உள்ள நார்ச் சத்து ஜீர ணத்தைக் கூட்டும். பல் வலி, ஈறுவலி களை குணப்படுத்தும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். ரத்தத்தை ஊற வைக்கும். நரம்புத் தளர்ச்சியைக் குணப் படுத்தும். கண்ணீர் நீர்வடிதல், மாலைக் கண் நோய்களைக் குணப்படுத்தும். மாம் பழச் சதையை மிக்ஸியில் போட்டு சிறித ளவு பால் சேர்த்து ஏலக்காய், ஐஷ் துண்டு களைச் சேர்ந்து அருந்த சுவையாக இப்ப தோடு வெப்பம், தோல் தொல்லைகளை நீக்கும்.
மாங்காயின் பயன்கள்
மா இலையின் பயன்கள்
இலையைச் சுட்டு வெண்ணெயில் குழைத்து தீப்புண், காய்ங்கள் மீது தடவி னால் விரைவில் குணமாகும். மாந்தளிரை மென்று தின்று வர பல் ஈறு உறுதிப்படும். இலையைத் தீயில் இட்டு புகையைச் சுவா சிக்க, தொண்டை வலி மாறும். இதன் துளிர் இலைகளைப் பொடியாக்கி தேனில் குழைத்து உண்ண வயிற்றுப் போக்கு நிற் கும். உலர்ந்த பூக்களை நீரிலிட்டு காய்த்து வடிகட்டி வயிற்றுப்போக்கின்போது அடிக்கடி குடித்திட வயிற்றுப்போக்கு நிற் கும். மாங்கொட்டை பருப்பைப் பொடி யாக்கி வெண்ணெயில் கலந்து சாப்பிட வயிற்றுவலி குணமாகும்.