உடனுக்குடன் செய்திகளைப் பெற எங்கள் WhatsApp சேனலில் இணையவும் ! Join Now!

மிகவும் கொடிய விஷம் வாய்ந்த 10 விலங்குகள்..!

இந்த உலகில் பல  உயிரினங்கள் வாழ்கின்றன அவற்றில் மிகவும் கொடிய விஷம் வாய்ந்த 10 விலங்குகளை இந்த கட்டுரையில் காண்போம்.


பாக்ஸ் ஜெல்லி மீன்(Box Jellyfish):

IMAGE SOURCE :HTTPS://ANIMALS.HOWSTUFFWORKS.COM/MARINE-LIFE/BOX-JELLYFISH.HTM

  • உலகின் மிகவும் விஷம் வாய்ந்த உயிரினம் என்ற பட்டத்தைப் பெறுகிறது பாக்ஸ் ஜெல்லி மீன்.
  • 1954 முதல் குறைந்தது 5567 மரணங்களையாவது சம்பவித்திருக்கிறது இந்த ஜெல்லி.
  • இதன் நஞ்சனது, இதயம், நரம்புத்தொகுதி மற்றும் கலங்களைத்(செல்) தாக்கும்.
  • இதில் பயங்கரமான விடயம் என்னவென்றால், இது அதிகப்படியான வலியைக் கொடுத்து நாம் கரையை அடையும் முன்னரே இதயத்தை நிறுத்தி கொன்று விடும்.
  • உயிர் பிழைத்தவர்களும் சில பல வாரங்கள் கடந்தும் குணப்படுவதில்லை.

ராஜ நாகம் (King Cobra ):

IMAGE SOURCE :HTTPS://ANIMALS.SANDIEGOZOO.ORG/ANIMALS/COBRA

  • ராஜ நாகம்தான் இந்த உலகின் மிக நீளமாக வளரக்கூடிய (5.6m) நஞ்சு கொண்ட பாம்பினம்.
  • இது பாம்புண்ணி என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது ஏனைய சிறிய பாம்புகளை சாப்பிடும்.
  • இதன் ஒரு கடி நன்கு வளர்ந்த மனிதனை 15 நிமிடத்தில் கொல்லக்கூடியது.
  • தும்பிக்கை போன்ற மென்மையான இடங்களில் கடிபட்டால், நன்கு வளர்ந்த ஆசிய யானையைக் கூட 3 மணி நேரத்தில் கொன்று விடும்.
  • இது கருப்பு மாம்பா போல நஞ்சுடையதாக இல்லாவிட்டாலும் அதிகளவு நஞ்சை ஒரே நேரத்தில் செலுத்தகூடியது என்பதால் பயங்கரமானது.

பளிங்கான கூம்பு நத்தை( Conus Marmoreus):

IMAGE SOURCE :HTTPS://EN.WIKIPEDIA.ORG/WIKI/CONUS_MARMOREUS

  • பார்க்க அழகாக பளிங்கு போலிருக்கும் இந்த கூம்பு நத்தை மிகவும் கொடூரமானது.
  • இதன் ஒரு சொட்டு நஞ்சு 20 மனிதர்களைக் கொல்லப் போதுமானது.
  • இது வெதுவெதுப்பான உப்பு நீர்ப் பிரதேசங்களில் வாழும்.
  • இதனைக் கண்டால் கையில் எடுப்பதைப் பற்றி நினைக்கக் கூட வேண்டாம்.
  • இதன் நஞ்சுக்கு எதிர் நஞ்சு இல்லை. கடித்தால் மூச்சுக் கோளாறு, பக்கவாதம் போன்ற நிலைகள் கூட ஏற்படலாம்.

நீல வளைய ஒக்டோபஸ்(Blue Ringed Octopus):

IMAGE SOURCE :HTTPS://OCEANA.ORG/MARINE-LIFE/CEPHALOPODS-CRUSTACEANS-OTHER-SHELLFISH/SOUTHERN-BLUE-RINGED-OCTOPUS

  • இது மிகச்சிறியது.
  • அதிக பட்சமாக கோல்ப் பந்து அளவு இருக்கும். ஆனால் 26 மனிதர்களைக் கொல்லகூடிய அளவு பயங்கர நஞ்சைக் கொண்டது.
  • இதன் கடி வலியில்லாவிட்டாலும் தசை செயலிழப்பு மற்றும் மந்தத்தன்மையுடன் சுவாசக் கோளாறையும் ஏற்படுத்தி மரணத்தை உண்டாக்கும்.

பாலைவன தேள்(Dessert Scorpion):

IMAGE SOURCE :HTTP://ANIMALSCENE.PH/2018/02/12/QUEEN-OF-THE-DESERT/

  • சாதரணமான தேள்களால் மனிதருக்கு பெரும் ஆபத்தில்லை. ஏனெனில் அவை சாதாரணமாக கடித்தால் எரிச்சல், கடுப்பு முதலியன மட்டுமே எழும்.
  • ஆனால் கொலையாளித் தேள் கடித்தால் தாங்கமுடியாத வலி ஏற்பட்டு, காய்ச்சல் ஏற்பட்டு, வலிப்பு எடுத்து, கோமா நிலைக்கு சென்று மரணிப்பீர்கள்.

  • ஆனால் இது எல்லாருக்கும் அல்ல. சற்று ஆரோக்கியமான ஒருவரை அவ்வளவு மோசமாக பாதிக்காது. சிறுவர்கள் மற்றும் முதியோரில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

கல்மீன்(Stone Fish):

IMAGE SOURCE :HTTPS://WWW.SILADEN.COM/THE-OCEANS-MOST-VENOMOUS-FISH-REEF-STONEFISH/

  • கல் மீன் உலகின் அழகான மீனாக இல்லாவிட்டாலும் உலகின் மிகப் பயங்கரமான மீன் அல்லது நஞ்சுமிக்க மீன் என்ற பட்டத்தை வெல்லக்கூடியது.
  • அதன் முதுகுப் பகுதியில் ஒவ்வொன்றும் இரண்டு நஞ்சுப் பைகளுடன் இணைக்கப்பட்ட 13 முள்ளந்தண்டெலும்புகள் நீட்டிக் கொண்டிருக்கின்றன.
  • இவற்றின் விஷம் உள்ளிறங்கும் அளவைப் பொறுத்து தசை செயழிலப்பு, முடக்குவாதம், அதிர்ச்சி போன்றன ஏற்பட வாய்ப்புண்டு.
  • பாதிக்கப்பட்டவர்கள் கருத்துப்படி, இதனை மிதித்தால் அந்த காலை வெட்டி நீக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுமாம்.

பிரேசில் சிலந்தி(Brazil Spider):

IMAGE SOURCE :HTTPS://EN.WIKIPEDIA.ORG/WIKI/PHONEUTRIA

  • பிரேசிலின் சிலந்தி அல்லது வாழைப்பழ சிலந்தி 2007 ஆம் ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் அதிக மரணங்களை சம்பவித்த உயிரினமாக பதிவானது.
  • சிலந்தி வகைகளிலேயே மிகவும், சக்திவாய்ந்த விடம் கொண்டது இது என நம்பப்படுகிறது.
  • அதன் விஷத்தின் 0.006 mg கொண்டு ஒரு எலியைக் கொல்லலாம்.
  • இது வீட்டு சுற்றுப்புறங்களில் அலைந்து திரிவதால் இன்னும் அபாயகரமானது. மிகவும் பயங்கரமான வலியை மட்டுமன்றி தசை நோய் மற்றும் ஏனைய நரம்பு வியாதிகளையும் கொடுக்க வல்லது.

இன்லேண்ட் தாய்ப்பன்(Inland Taipan):

IMAGE SOURCE :HTTPS://WWW.FLICKR.COM/PHOTOS/ELLIOTBUDD/46287628374

  • உலகின் மிகப்பயங்கரமான நஞ்சு கொண்ட பாம்பு.
  • இதன் ஒரு கடி 100 மனிதர்களையும் 250,000 எலிகளை கொண்ட படையையும் கொல்லப் போதுமானது.
  • சாதாரண நாகத்தை விட 200-400 மடங்கு நஞ்சு கொண்டது.
  • 45 நிமிடத்தில் வளர்ந்த மனிதனைக் கொல்லக்கூடியது.
  • இந்த பாம்பு சிறிது வெட்க குணமுடையதால் அதிகளவில் மரணங்கள் பதிவாகவில்லை.

விஷ அம்புத் தவளை(Poison Dart Frog):

IMAGE SOURCE :HTTPS://KIDS.NATIONALGEOGRAPHIC.COM/ANIMALS/AMPHIBIANS/POISON-DART-FROG/

  • உலகத்திலயே மிகவும் நஞ்சு கொண்ட தவளை இனம் இதுதான்.
  • 5cm நீளமுடைய இந்த விஷ அம்புத் தவளை 10 மனிதர்களையும் 20,000 எலிகளையும் கொல்லகூடியது.
  • 2 மைக்கிரோ கிராம்கள் (ஊசி நுனியில் வைக்கக் கூடிய அளவு) விஷம் ஒரு மனிதனையோ அல்லது பாலூட்டியையோ கொல்லக்கூடியது.
  • இந்த தவளையைத் தொடும் அல்லது உண்ணும் எதுவும் இறந்துபோகும். அந்த அளவு நஞ்சை தோலில் கொண்டுள்ளது.

கோள மீன் அல்லது பலூன் மீன் :


  • இந்த மீனின் சுவைக்காக இது ஜப்பானில் விரும்பி உண்ணப்படும் உணவாக உள்ளது.
  • இந்த மீனின் நஞ்சு உடனடி மரணத்தைக் கொண்டு வரும்.
  • இது நாக்கு மற்றும் உதட்டை செயலிழக்க வைப்பதோடு மயக்கம், வாந்தி, உடனடி இதய துடிப்பு அதிகரிப்பு, மூச்சு விடலில் கடினம் என்பவற்றோடு தசை செயலிழப்பையும் கொண்டு வரும்.
  • பெரும்பாலான பாதிக்கப்பட்டோர் 4 – 24 மணி நேரத்துள் மரணித்துள்ளனர்.
  • இது பயங்கரமானது என்பதால் காப்புரிமம் பெற்ற நபர்கள் மட்டுமே இதனை சமைக்கலாம்.

இந்தத் தொகுப்பு பிடித்திருக்கும் என நம்புகிறேன். இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு தவறாமல் இந்த தமிழ் INFOABLE வலைதளத்தைப் பின்தொடருங்கள்.

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.
NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...